ஒத்த ரூபா பிச்ச போட்டு
ஒலக வருமைய
ஒழிசுட்டாராம்
கார்கில் நிதிக்கு
காசு கொஞ்சம் கொடுத்து
காஷ்மீர காத்துட்டாராம்
கமலா அறக்கட்டளைக்கு
காசு கொடுத்து ஒலக
கல்வி கண்ண தொரந்துட்டாராம்
எப்ப புரிய போகுது
எவ்வளவு பணம் கொடுத்தாலும்
எவனும் தெரேசா ஆக முடியாதுன்னு
அள்ளி பணத்த தர்றதில்ல
ஆசையா அனைக்கறது தான்
அக்மார்க் கருணைன்னு
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஒத்த ரூபா.. சூப்பர்..
hmmm... nalla iruku..
Post a Comment