யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

சில மணி நேரத்தில் கண்டம தாண்டும்
விமானம் இல்லாமல் வாழ முடியுமா?

உலகத்தை வீட்டுக்குள் கொண்டு வரும்
தொலைக்காட்சி இல்லாமல் வாழ முடியுமா ?

உலகத்தில் எவருடனும் தொடர்பு கொள்ளும்
தொலைபேசி இல்லாமல் வாழ முடியுமா?

வித விதமாய் வர்ண வர்ணமாய்
மருந்துகள் இல்லாமல் வாழ முடியுமா?

பேருந்து, ரயில், இன்டர்நெட், பீட்சா
இவை இல்லாமல் தான் வாழ முடியுமா ?

நூறு ஆண்டுகள் முன்பு வரை இவை இல்லாமல்
பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து தான் இருக்கின்றான் மனிதன்

மரம், மலை, மழை, தூய காற்று
காடு, விலங்குகள், மாசில்லா தண்ணீர்

இவை இல்லாமல் எந்த மனிதனும் வாழ்ந்ததும் இல்லை
இனி வாழ போவதும் இல்லை

மரம் வளர்ப்போம் !! மரம் வளர்ப்போம் !!


0 comments: