யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 300க்கும் மேற்பட்டோர், கொட்டிவாக்கத்தில் உள்ள கட்சி தலைவர் சரத்குமார் வீட்டு முன்பு நேற்று குவிந்தனர்.
'ராதிகா சரத்குமாருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க வேண்டும், அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்' என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்து முழக்கமிட்டனர். தென் சென்னை மாவட்ட செயலாளர் கே. ஜே. நாதன் தலைமையில் அவர்கள் வந்திருந்தனர்.

தகவல் அறிந்து சரத்குமார், ராதிகா ஆகியோர் அங்கு வந்து கூட்டதனரிடையே பேசினர். அப்போது சரத்குமார் பேசுகையில், 'குடும்ப அரசியலை விரும்பாதவன் நான். இருந்தாலும் ராதிகா பண்பான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். உங்கள் கொள்கையை ஏற்று, கட்சியின் உயர்மட்டக்குழுவுடன் கூடிப்பேசி ஒரு நல்ல முடிவை அறிவிக்கிறேன் . என்ன அறிவிப்பு என்பதை இம்மாதம் 30ம் தேதி திருநெல்வேலியில் நடக்கும் கட்சி பொதுகூட்டத்தில் தெரிவிப்பேன்' என்றார்.

ராதிகா பேசும்போது 'நான் பதவிக்கு ஆசைப்படவில்லை. இருந்தாலும் தொண்டர்கள் வற்புருத்துதளுக்கும் கட்சியின் தலைமைக்கும் கட்டுபடுவேன். நான் நடத்தும் ராடன் டிவி நிறுவனத்தில் 250 பேர் பணிபுரிகிறார்கள். திடீரென அவர்களை விட்டு விட்டு தீவிர அரசியலுக்கு வரமுடியாது' என்றார்.

நன்றி : தினகரன்


காமெடி 1: 300க்கும் மேற்பட்டோர் அந்த கட்சியில் இருகிறார்களாம்
காமெடி 2: குடும்ப அரசியலை விரும்பாதவன் நான். இருந்தாலும் - சரத்
நான் பதவிக்கு ஆசைப்படவில்லை. இருந்தாலும் - ராதிகா
இந்த இருந்தாலும் பன்ற தொல்ல தாங்க முடியலடா சாமி


காமெடி 3: "உங்கள் கொள்கையை ஏற்று, " - கட்சியின் கொள்கையே ராதிகா அரசியலுக்கு வர்றது தானா ?


1 comments:

shankar said...

காமெடி 4:"நான் நடத்தும் ராடன் டிவி நிறுவனத்தில் 250 பேர் பணிபுரிகிறார்கள். திடீரென அவர்களை விட்டு விட்டு தீவிர அரசியலுக்கு வரமுடியாது" - கட்சியில இருக்கறதே அந்த 250 பேர் மற்றும் கார் டிரைவர், வீட்டு வேலைக்காரர்கள், ஸெக்கூரிட்டி ஆக மொத்தம் 50 பேருக்கும் மேல சேர்த்து 300க்கும் மேற்பட்டோர் அந்த கட்சியில் இருகிறார்களாம்