ஹைதராபாத், பிப், 5: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முன்னால் தலைவர் ராமலிங்க ராஜுவுக்கு 63 நாடுகளில் சொகுசு குடியிருப்புக்கள் இருப்பதும் ஆடம்பர வாழ்கை வாழ்ந்ததும் அம்பலமாகி உள்ளது.
கம்பெனியின் கணக்கு வழக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த ராமலிங்க ராஜு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கு விசாரணை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மோசடி குறித்த பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சத்யம் ராஜு சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. பேஷன் மீது அதிக ஆர்வம் காட்டியுள்ள இவர் 1000இக்கும் மேற்பட்ட சூட்களை வாங்கி குவித்துள்ளார். இதன் மதிப்பே ரூ. 5 கோடி இருக்கும். 521 ஜோடி ஷூ இக்கள், 310 பெல்ட்களை இவர் வைத்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள பல கோயில்களுக்கு அடிக்கடி சென்றதுடன் சுமார் 2 டன் தங்கத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 260 கோடி. ஒரு நவீன டெல இஸ் கோப்பை வாங்கியுள்ளார். ரூ. 1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இது வேறு எந்த இந்தியரின் வீட்டிலும் இருக்க வாய்ப்பே இல்லை என அமலாக பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment