யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

அழகிற்கு இலக்கணம் கற்பிக்க
நினைப்பவர்கள் முட்டாள்கள்
அழகை வரையறுக்க முயல்பவர்கள்
ரசனை அற்றவர்கள்

மீன் போன்ற கண்ணே
மேலானது என்பவர்கள்
உருண்டை கண்
உருட்டலில் உழலாதவர்கள்

சீரான பற்களே
சிறப்பென நினைப்பவர்கள்
தெத்து பல் பெண்களின்
சிரிப்பில் சிக்காதவர்கள்

வெளிர் நிறமே உயர்ந்தது
என பேசுபவர்கள்
கருப்பு மங்கையரின் அழகில்
காணாமல் போகாதவர்கள்

நெடிய கூந்தலே சிறந்தது
என வாதிடுபவர்கள்
சுருட்டை முடி அலைகளில்
நீந்த தெரியாதவர்கள்

உயரமான பெண்களையே
உயர்த்தி பிடிப்பவர்கள்
குட்டை பெண்ணின் முகம்
நெஞ்சில் புதைவதை ரசிக்காதவர்கள்

சிறுத்த இடையை
சிலாகித்து பேசுபவர்கள்
இடுப்பு மடிப்புக்களில்
மயங்கி போகாதவர்கள்

மாசற்ற முகத்தை
முன் மொழிபவர்கள்
கழுத்து தேமலுக்கும் உதட்டு
மச்சத்திற்கும் மடியாதவர்கள்


0 comments: