யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்


(இது கலைஞரை பற்றி இல்லை.. அட நெசமாத்தான் )

இவர்களுக்கு
நரகாசூரன் என்ற அரக்கனை
கொன்றால் மூடநம்பிக்கை

இறந்தவர் மூன்று நாட்களுக்கு பின்
உயிர்தெழுந்தால் பகுத்தறிவு

அம்மன் கோவிலில் கூழ்
ஊற்றினால் பழிப்பார்

நோம்பு கஞ்சு வைத்தால்
முதல் ஆளாய் போய் நிற்பார்

தீ மிதிப்பதையும் அலகு
குத்துவதையும் நகைப்பார்

உயிர்த்து எழ வைக்கும் கூட்டம்
பற்றி வாய் திறக்க மாட்டார்

தீபாவளி, விநாயகர் சதுர்த்தியை
மற்றொரு விடுமுறையாய் பார்ப்பவர்

ரம்ஜான் கிறிஸ்துமஸ் வாழ்த்து 
செய்தி சொல்ல மறப்பதில்லை

பகுத்தறிவின் முழு இட ஒதுக்கீட்டை
ஒரே மதத்துக்கு அளித்து விட்டனர்

நாளையே ஹிந்து மக்கள்
சிறுபான்மையினராய் மாறினால்
ராமரை புகழ்ந்து கவிதை வரலாம்
பகுத்தறிவு பாசறையில் இருந்து

இவர்களுக்கு முக்கியம்
மக்களின் பகுத்தறிவும் இல்லை
அனைவருக்கும் சமஉரிமையயும் அல்ல 
தேவை எல்லாம் ஓட்டுகள் ஓட்டுகள் மட்டுமே !!!


இது கவிதை தான் நம்புங்க :)


2 comments:

ஸ்வர்ணரேக்கா said...

//இது கவிதை தான் நம்புங்க//

நம்பிட்டேன்.... நல்லா இருக்குங்க உங்க கவிதை....

Rangarajan S said...

ரொம்ப நன்றி ரேக்கா.. நானே இன்னும் நம்பல அது கவிதைனு :)