யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு நல்ல முயற்சியாய் இப்பொழுது நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் போட்டியாளர்களில் யார் யார் மேல் கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என பட்டியலிட்டு இருக்கின்றது. மேலும் கிரிமினல் வழக்கு உள்ளவர்களை கட்சிகள் வேட்பாளர்களாய் அறிவிக்க கூடாது என ஒரு வாக்கெடுப்பு எடுக்கின்றது. கீழே உள்ள முகவரிக்கு சென்று வலதுப்புறத்தில் உங்கள் பெயரும், ஈமெயில் முகவரியையும் அளியுங்கள்.

http://www.lead.timesofindia.com/No_to_criminals.aspx


கிரிமினல் வழக்கு உள்ள வேட்பாளர்கள் பட்டியல் கீழே,

http://www.lead.timesofindia.com/content/pending_cases.xls

இந்த பட்டியலில் இருந்து சில புள்ளி விபரங்கள்(கேப்டன் அளவுக்கு இல்லாட்டியும் கொஞ்சம்). கிரிமினல் வேட்பாளர்கள் கட்சி வரிசையாய்,

இந்தியா மொத்தம் - 122
=======================
பாஜக - 29
காங்கிரஸ் - 25
சமாஜ்வாடி பார்ட்டி - 11
ராஷ்ட்ரிய ஜனதாதளம் - 8
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி - 7
பகுஜன் சமாஜ்வாடி - 7

தமிழ்நாடு - 7
=============
திமுக - 4
காங்கிரஸ் - 2
கம்யூனிஸ்ட் பார்ட்டி(CPI) - 1

இந்த பட்டியலை பார்க்க நேரம் இல்லாதவர்களுக்கு தமிழ்நாட்டின் அந்த நல்ல(!) வேட்பாளர்கள்,

திரு. கிருஷ்ணசுவாமி - திமுக - ஸ்ரீபெரம்பதூர்
திரு. வேங்கடபதி - திமுக - கடலூர்
திரு. ரெகுபதி - திமுக - புதுக்கோட்டை
திரு. குப்புசாமி - திமுக - சென்னை வடக்கு
திரு. தனுஷ்கோடி ஆதித்தன் - காங்கிரஸ் - திருநெல்வேலி
திரு. இளங்கோவன் - காங்கிரஸ் - கோபிசெட்டிபாளையம்
திரு. அப்பாதுரை - கம்யூனிஸ்ட் பார்ட்டி(CPI) - தென்காசி


(ஒரு சந்தேகம் அதிமுகவுல எல்லாரும் நல்லவங்களா ??? )


1 comments:

Joe said...

//
அதிமுகவுல எல்லாரும் நல்லவங்களா
//

ரொம்ப நல்லவங்க! ;-)

மக்களுக்கு ஞாபக மறதி இருக்கிற வரைக்கும், எல்லா கொலைகாரனும், கொள்ளைக்காரனும் இந்த நாட்டில எம்.பி, எம்.எல்.ஏ ஆகலாம்.